இன்று பெரியார் பல்கலை பட்டமளிப்பு விழா
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில், 23வது பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இதில் மாணவ, மாணவியருக்கு, கவர்னர் ரவி பட்டங்களை வழங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் நேற்று காலை, 11:40 மணிக்கு சேலம் வந்தார். விமான நிலையத்தில் கலெக்டர் பிருந்தாதேவி, எஸ்.பி., கவுதம் கோயல் வரவேற்றனர். அங்கிருந்து காரில் பெரியார் பல்கலைகழகத்துக்கு சென்றவரை, துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி, மலர்கொத்து வழங்கி வரவேற்றனர். மதிய உணவு அருந்திய பின், மேச்சேரியில் நெசவாளர் கவுரவிப்பு விழாவுக்கு புறப்பட்டார். இரவு பல்கலை விருந்தினர் மாளிகையில் கவர்னர் தங்குகிறார். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.