உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்று தீபாவளி பண்டிகை ஜவுளி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

இன்று தீபாவளி பண்டிகை ஜவுளி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேலம்: தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் குடும்பத்தினருடன் புத்தாடை அணிந்து இனிப்பு சாப்பிட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடுவர். இதற்கு ஜவுளி, இனிப்பு வகைகள், நகைகள், காலணி உள்ளிட்ட பொருட்களை வாங்க, நேற்று கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.குறிப்பாக சேலம் டவுன் கடைவீதி, முதல் அக்ரஹாரம், தேர் நிலையம், குகை, 4 ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், 5 ரோடு, அழகாபுரம் உள்ளிட்ட பகுதி ஜவுளி கடைகளில் ஏராளமானோர் ஆடைகளை வாங்கினர். கடைகளில் நெரிசலுக்கு இடையே மக்கள் சென்று வந்தனர். அந்த அளவு கூட்டம் காணப்பட்டது. சாலைகளிலும் திரும்பிய இடம் எல்லாம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.நேற்று மாலையில் இறுதிக்கட்ட வியாபாரம் களைகட்டியது. இதனால் சேலம் மாநகரின் பல்வேறு இடங்களில் கூட்டம் காணப்பட்டது. சாலையோர தற்காலிக கடைகளிலும் ஜவுளிகளை மக்கள் வாங்கினர். மேலும் புது பஸ் ஸ்டாண்ட் அருகே பட்டாசு கடைகளில் மக்கள் விதவிதமான பட்டாசுகளை வாங்கி சென்றனர். வீட்டு உபயோக பொருட்கள், மொபைல் போன், நகை, வளையல் கடைகளிலும், பண்டிகையை முன்னிட்டு விற்பனை அமோகமாக நடந்தது. தவிர இனிப்பு, புதிய பாத்திரங்கள், வீடுகளில் பலகாரம் தயார் செய்வதற்கு மாவு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நடந்தது. மாநகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். தவிர சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாட, சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று ஏராளமான பயணியர் சென்றனர். அதேபோல் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனிலும் கூட்டம் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி