மேலும் செய்திகள்
நாமக்கல் உழவர் சந்தையில் 30 டன் காய்கறி விற்பனை
25-Nov-2024
சேலம், டிச. 12-மழை நின்றதால் வரத்து அதிகரித்து தக்காளி விலை வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது.சேலம் மாவட்டத்தில், 13 இடங்களில் உழவர் சந்தைகள், மாநகரில் பால் மார்க்கெட், ஆற்றோர சந்தை, அம்மாபேட்டை மட்டுமின்றி ஆத்துார், மேட்டூர் உள்பட பல்வேறு இடங்களில் மார்க்கெட்டுகள் உள்ளன. அங்கு ஓமலுார், மேச்சேரி, சின்னதிருப்பதி, காருவள்ளி உள்பட பல்வேறு பகுதிகள், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, கர்நாடகாவின் கோலார் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தக்காளி கொண்டு வரப்படுகிறது.இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்து. செடிகளில் இருக்கும் பூ, பிஞ்சு, காய்கள் கொட்டின. வயல்களில் தண்ணீர் தேங்கி பழங்கள் சேதமாகின. இதனால் வரத்து குறைந்து விலை உயர்ந்தது.தற்போது மழை நின்று வெயில் அடிக்க தொடங்கியதால் விளைச்சல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதற்கேற்ப மார்க்கெட், உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து, கடந்த வாரம், 60 சதவீதம் இருந்த நிலையில், தற்போது, 100 சதவீதம் உள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது.கடந்த, 4ல் ஒரு கிரேடு(25 கிலோ) தக்காளி முதல் ரகம், 1,400, இரண்டாம் ரகம், 1,200, மூன்றாம் ரகம், 1,000 ரூபாய்க்கு விற்றது. உழவர் சந்தையில் முதல் ரக தக்காளி கிலோ, 70; இரண்டாம் ரகம், 50; மூன்றாம் ரகம், 40 ரூபாய்க்கு விற்றது. வெளி மார்க்கெட்டில் முறையே, 80, 60, 50 ரூபாய்க்கு விற்றது. ஆனால் நேற்று ஒரு கிரேடு முதல் ரக தக்காளியே, 500 முதல், 600 ரூபாய் வரையே விலைபோனது. இரண்டாம் ரகம், 400 முதல், 450; மூன்றாம் ரகம், 300 முதல், 350 ரூபாய் வரை விலைபோனது. உழவர் சந்தையில் முதல் ரக தக்காளி கிலோ, 28 ரூபாய், இரண்டாம் ரகம், 20, மூன்றாம் ரகம், 16 ரூபாய்க்கு விற்பனையானது. வெளி மார்க்கெட்டில் முறையே, 30, 25, 20 ரூபாய்க்கு விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
25-Nov-2024