உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநகராட்சி பள்ளிகளை புனரமைக்க நடவடிக்கை சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

மாநகராட்சி பள்ளிகளை புனரமைக்க நடவடிக்கை சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

சேலம்: ''மாநகராட்சி பள்ளிகளை, 2.20 கோடி ரூபாய் மதிப்பில் புனர-மைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசினார்.சேலம் நேரு கலையரங்கில், அம்மாபேட்டை மண்டல மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. அதில் மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட பின், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது: முதல்வர், மூன்றரை ஆண்டுகளில் சேலம் மாவட்டத்துக்கு, 10,000 கோடி ரூபாய்க்கு மேலான பல்-வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், சேலம் மாவட்டத்தில் மட்டும், 10.44 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில், 146 ரேஷன் கடை கட்டடங்கள் கட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்-டுள்ளன. 84,061 மின்னணு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்-ளன. அம்மாபேட்டை மண்டலத்தில் மட்டும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில், 75,000 பேர், முதியோர் உதவித்தொ-கையை, 33,000 பேர் பெற்று வருகின்றனர். 2.20 கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சி பள்ளிகள் புனரமைப்பு, அம்மாபேட்டை மண்டலத்தில், 135.68 கோடி ரூபாய் மதிப்பில் வடிகால், 17.57 கோடி ரூபாயில் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்-பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.இதில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி, மாநகராட்சி, வருவாய், ஆதி திராவிடர் நலன் உள்ளிட்ட துறைகள் மூலம், 546 பயனாளிகளுக்கு, 73.18 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உத-விகள் வழங்கப்பட்டன. கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் எம்.பி., செல்வகணபதி உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து கொண்டலாம்பட்டி மண்டல மக்கள் சதிப்பு திட்ட முகாம், சீலநா-யக்கன்பட்டியில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி