உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பனமரத்துப்பட்டி ஏரியில் சுற்றுலாத்தலம் சேலம் அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

பனமரத்துப்பட்டி ஏரியில் சுற்றுலாத்தலம் சேலம் அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஏரியில் மீண்டும் சுற்றுலா தலம் அமைக்க, சேலம் அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என விவசாயிகள் எதிர்-பார்க்கின்றனர்.சேலம் மாநகர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஜரு-குமலை அடிவாரத்தில், 2,137 ஏக்கரில், 1911ல் பனமரத்துப்-பட்டி ஏரியை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். அங்கிருந்து சேலம், ராசிபுரம், மல்லுார், பனமரத்துப்பட்டி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகித்தனர். குடிநீர் எடுக்க, 2 வால்டோர், இயற்கை முறையில் குடிநீரை சுத்திகரிக்கும் ராட்சத தொட்டி, மோட்டார் இல்லாமல் சேலத்துக்கு குடிநீரை பம்பிங் செய்த தொழில்நுட்பம், கண்கவர் பூங்கா இருந்தன. ஏரியில் படகு போக்குவரத்தும் நடந்துள்ளது. அங்குள்ள சுற்றுலா மாளிகையில் முன்னாள் முதல்வர்கள் கருணா-நிதி, எம்.ஜி.ஆர்., உள்ளிட்டோர் தங்கி ஏரி அழகை ரசித்துள்-ளனர். ஏரியில் ஏராளமான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்-ளன. அப்போதே பனமரத்துப்பட்டி ஏரி சேலம் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருந்தது. இந்நிலையில் சேலத்துக்கு மேட்டூரில் இருந்து காவிரி குடிநீர் கொண்டு வரப்-பட்ட பின், பனமரத்துப்பட்டி ஏரி குடிநீர் திட்டத்தை, சேலம் மாநகராட்சி கைவிட்டது. 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்-கிய ஏரி, 2005ல் மீட்கப்பட்டது. அந்த ஆண்டு பெய்த மழையால் ஏரி நிரம்பியது. தொடர்ந்து மழை பொழிவு குறைய, படிப்படியாக ஏரி வறண்டு சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளன. இதனால் ஏரியை துார்வாரி, காவிரி உபரி நீரை நிரப்பி, சுற்றுலா தலமாக மாற்ற, பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள, சேலத்தை சேர்ந்த ராஜேந்திரன், கடந்த, 29ல் பனமரத்துப்பட்டி வந்தார். அப்போது ஏரியில் சுற்றுலா தலம் அமைக்க, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சவுந்தரராஜன், தி.மு.க., நகர செயலர் ரவிக்குமார், தனித்தனியே கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.இதுறித்து விவசாயிகள் கூறுகையில், 'சேலம் அமைச்சர் ராஜேந்-திரன், ஏரியை பார்வையிட்ட பின், சுற்றுலா தலம் அமைப்பதாக உறுதி அளித்தார். அவர் சுற்றுலா துறை அமைச்சர் என்பதால், பனமரத்துப்பட்டி ஏரியில் சுற்றுலா தலம் அமைப்பார் என்ற நம்-பிக்கை உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ