ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்
ஏற்காடு: ஏற்காட்டில் நேற்று ஏராளமான சுற்றுலா பய-ணியர் குவிந்தனர். அவர்கள், அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்களை குடும்பத்துடன் கண்டுகளித்தனர். முக்கியமாக படகு இல்லத்தில் காலை முதலே, ஏராளமான சுற்றுலா பயணியர், படகு சவாரி செய்து மகிழ்ந்-தனர். அதேபோல் சேலம் மாவட்டம் பூலாம்பட்-டியில் உள்ள காவிரி ஆற்றில், விசைப்படகு மூலம் ஏராளமானோர் பயணித்து, விடுமுறை நாளை கொண்டாடினர்.