தொடர் விடுமுறை எதிரொலி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை எதிரொலிஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்ஏற்காடு, அக். 12-ஏற்காட்டில், நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா, லேடி சீட், ஜென்ஸ் சீட், சில்ரன்ஸ் சீட், பகோடா பாயின்ட், கரடியூர் காட்சி முனை போன்ற இடங்களை கண்டு ரசித்தனர்.ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், நேற்று சுற்றுலா பயணிகள் ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்தனர். அந்த இடத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.சுற்றுலா பயணிகள், படகு சவாரிக்கான பயண சீட்டு வாங்கி, ஒரு மணி நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.