உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீயணைப்பு வீரர்களுக்கு விமான நிலையத்தில் பயிற்சி

தீயணைப்பு வீரர்களுக்கு விமான நிலையத்தில் பயிற்சி

ஓமலுார்: சேலம் விமான நிலையத்தில் பயணியர், தனியார் விமானங்கள், விமானி பயிற்சி விமானங்கள் இயக்கப்படுகின்றன. அங்கு அதிநவீன, 'பப்போலோ' தீயணைப்பு வாகனம் மற்றும் பழைய வாகனம் உள்ளன. நவீன வாகனம், 6,000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டது. 2 நிமிடத்தில் முழு கொள்ளளவு நீரை வெளியேற்றி, தீயை அணைக்க கூடியது.இந்திய விமான ஆணைய தீயணைப்பு வீரர்களுடன், தமிழக தீயணைப்பு வீரர்கள் இணைந்து, சேலம் விமான நிலையத்தில் பணிபுரிகின்றனர். அவர்கள் பணிக்காலம், 5 ஆண்டு. பின் அந்தந்த வீரர்கள், அவர்கள் பணியாற்றிய இடத்துக்கு திரும்பிச்சென்றுவிடுவர். இதனால் மாநில தீயணைப்புத்துறை சார்பில், தற்போது தேர்வு பெற்று புதிதாக வந்துள்ள, 8 வீரர்களுக்கு, கடந்த, 12ல், சேலம் விமான நிலைய இயக்குனர் வைதேகிநாதன் தலைமையில், 1 மாத பயிற்சி தொடங்கி நடக்கிறது. தீ விபத்தில் விமானம், பயணியர் மீட்பு, அதிநவீன தீயணைப்பு கருவிகள், வாகன பயன்பாடு, ஓடுதளத்தில் எவ்வாறு பயணிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முன்னதாக தொடக்க விழாவில் சென்னை, தீயணைப்புத்துறை முதுநிலை மேலாளர் கணேஷ், விமான நிலைய பொது மேலாளர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !