உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவ கல்லுாரியில் பயிற்சி

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவ கல்லுாரியில் பயிற்சி

சேலம் :இந்திய ஈறு நோய் அறுவை சிகிச்சைத்துறை சங்கம், விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவ கல்லுாரி இணைந்து, ஒரு நாள் தேசிய முதுநிலை பட்டதாரி பயிற்சி முகாமை நடத்தியது. இந்நிகழ்வின் ஏற்பாட்டு குழு தலைவர் சரண்யன், அனைவரையும் வரவேற்றார். தலைமை விருந்தினராக, விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை துணைவேந்தர் சுதிர், சிறப்பு விருந்தினராக, சங்க பொருளாளர் விசாகா கிரோவர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் பேபிஜான், ஏற்பாட்டு குழு செயலர் ஜெயச்சந்திரன் பேசினர். முகாமில், பல்வேறு மாநிலங்களில் இருந்து, 135 பங்கேற்பாளர்கள், 90 முதுநிலை பட்டதாரி மாணவர்கள், 45 ஆயுள் உறுப்பினர்கள், அறிவியல் அமர்வுகள், கைமுறைப் பயிற்சிகள் மூலம் பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ