உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 40 விவசாயிகளுக்கு மதுரையில் பயிற்சி

40 விவசாயிகளுக்கு மதுரையில் பயிற்சி

பனமரத்துப்பட்டி வட்டார விவசாயிகள், 40 பேருக்கு, 'அட்மா' திட்டத்தில், தொழில் முனைவோர் பயிற்சிக்கு, மதுரை அழைத்துச்செல்லப்பட்டனர். அங்குள்ள வேளாண் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையத்தில், கடந்த, 19, 20, 21ல், சிறுதானியங்கள் மதிப்பு கூட்டல், எண்ணெய் வித்துகள் மதிப்பு கூட்டல், பால் பொருட்கள் மதிப்பு கூட்டல் பற்றி நேரடி செயல்விளக்க பயிற்சி பெற்றனர்.மேலும் திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம், வேளாண் உற்பத்தியாளர் நிறுவனத்தில் முருங்கைக்காய், முருங்கை தழை, காய் ஆகியவை மதிப்பு கூட்டிய உணவு பொருளாக மாற்றி விற்பது, கூடுதல் லாபம் பெறுதல் குறித்து பயிற்சி பெற்றனர். இதன் ஏற்பாடுகளை, 'அட்மா' குழு தலைவர் சந்திரசேகர், வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி