மேலும் செய்திகள்
பணியாளர் நாள் நிகழ்வு கூட்டம்
09-Jan-2025
சேலம்: கூட்டுறவு துறையில் பணிபுரியும் சார்நிலை அலுவலர்களுக்கு, 2024ம் ஆண்டு புத்தாக்க பயிற்சி, சேலம், அழகாபுரத்தில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நடந்தது. கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார்(முழு கூடுதல் பொறுப்பு) தலைமை வகித்தார். சேலம் மாவட்ட மத்-திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மீராபாய் பேசினார்.அதில் கூட்டுறவுத்துறை தொடர்பான அரசாணைகள், பதிவா-ளரின் சுற்றறிக்கை, கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்தல், பதிவே-டுகள் பராமரித்தல், விசாரணை செய்தல் குறித்த பயிற்சி அளிக்-கப்பட்டது.வருமான வரித்துறை குற்றவியல் மற்றும் விசாரணை கழக உயர் அலுவலர் ராம் நாராயணன் மற்றும் கமலப்பிரியா, கூட்டு-றவு சங்கங்களில் வருமான வரி விழிப்புணர்வு, கருவூலத்துறை, வேளாண் துறையில் தற்போதைய நவீனமயமாக்கல் தொடர்-பாக பயிற்சி அளித்தனர். இதில் சரக துணை பதிவாளர்கள், நகர கூட்டுறவு வங்கி துணை பதிவாளர்கள், பொது வினியோக திட்ட துணை பதிவாளர், கூட்டுறவு சார் பதிவாளர்கள், முதுநிலை ஆய்-வாளர்கள், இளநிலை ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
09-Jan-2025