மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் வழங்கல்
08-Jul-2025
வீரபாண்டி, அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, வீரபாண்டி வட்டாரம், கீரைப்பாப்பம்பாடியை சேர்ந்த, 40 விவசாயிகளுக்கு, 'அட்மா' திட்டத்தில், அங்கக வேளாண்மை இடுபொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி, அதே பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது. வேளாண் துணை அலுவலர் ப.மூர்த்தி(பொ), தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன், பயிற்சியின் நோக்கம், முக்கியத்துவம் குறித்து பேசினார். தொடர்ந்து பஞ்சகவ்யா, மீன் அமிலம், மண்புழு உரம், இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல், ஊட்டமேற்றிய சாணம் உள்ளிட்ட இயற்கை வேளாண் பொருட்கள் தயாரிப்பு முறைக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இயற்கை வேளாண்மை முன்னோடி பயிற்சியாளர் மணி, ஐந்திலை கரைசல் உள்ளிட்ட தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தார். மேலும் இயற்கை இடுபொருட்கள், விவசாயிகள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
08-Jul-2025