உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

இடைப்பாடி, சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், புள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை சண்முகசுந்தரி தலைமை வகித்தார். பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் பழனிசாமி, நிர்வாகி ராஜ், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை தலைவர் சண்முகம், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் மகிழம், நாவல், சீத்தா உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இடைநிலை ஆசிரியை அமுதா மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி