உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலையோர தடுப்பு கம்பி மீது பைக் மோதி த.வெ.க., நகர நிர்வாகி பலி

சாலையோர தடுப்பு கம்பி மீது பைக் மோதி த.வெ.க., நகர நிர்வாகி பலி

ஆத்துார், சாலையோர தடுப்பு கம்பி மீது, பைக் மோதிய விபத்தில், த.வெ.க., நிர்வாகி உயிரிழந்தார்.ஆத்துார், உடையார்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ், 35. நடிகர் விஜய் மக்கள் இயக்க நகர செயலராகவும், த.வெ.க., நகர நிர்வாகியாகவும் இருந்தார். உடையார்பாளையம் பகுதியில், ேஹாட்டல் நடத்தி வந்தார். நேற்று, 'ேஹாண்டா - யுனிகான்' பைக்கில், கடையின் சமையலர் சுந்தரம், 60, என்பவருடன் தலைவாசலுக்கு முட்டை வாங்குவதற்கு சென்றார்.பின், தலைவாசலில் இருந்து, அம்மம்பாளையம், காந்திபுரம் வழியாக, ஆத்துார் நோக்கி வந்து கொண்டிருந்தார். மதியம், 3:30 மணியளவில் சமத்துவபுரம் பஸ் ஸ்டாப் வந்தபோது, முட்டை அட்டைகள் சரிவதுபோன்று இருந்ததால், அவற்றை சரிசெய்தபடி பைக் ஓட்டியபோது நிலைதடுமாறிய பைக், சாலையோர தடுப்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பைக் ஓட்டி வந்த, த.வெ.க., நிர்வாகி ரமேஷ் தலை கவசம் அணியாததால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுந்தரம் படுகாயமடைந்த நிலையில், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து, ஆத்துார் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ரமேஷூக்கு, மனைவி அருணா, 30, மகன் ஹரிபாலா, 12, ஆகியோர் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி