உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பல்லாங்குழி சாலையால் அவதி

பல்லாங்குழி சாலையால் அவதி

ஓமலுார்: ஓமலுார் அருகே காமலாபுரம் பிரிவு சாலையில், சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் சேலத்தில் இருந்து வரும் வாகனங்கள் செல்லும் சர்வீஸ் சாலை, ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுவதால், எளி-தாக வாகனங்கள் கடந்து செல்ல முடியவில்லை. வார இறுதி நாட்களில் அந்த இடத்தை கடந்து செல்லும் வாக-னங்கள் தள்ளாடியபடி செல்லும்படி, பள்ளங்கள் உள்ளன. இதனால் சில நேரங்களில் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகின்றனர். அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்-படுகிறது. மேம்பாலத்தின் சர்வீஸ் சாலைகளில் உள்ள பள்ளங்-களை சீரமைக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !