மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
28-Mar-2025
காரிப்பட்டி:சேலம் அடுத்த மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் நாராயணன் மனைவி ருக்மணி, 70. இவர் கடந்த, 30 இரவு 9:45 மணிக்கு வீட்டின் கதவை மூட வெளியே வந்த போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர், மூதாட்டி கழுத்தில் இருந்த, ஐந்தரை பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றார். இதுகுறித்து ருக்மணி மகன் மனோகரன் அளித்த புகார்படி, காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, மின்னாம்பள்ளி பெருமாள் கோவில் கரடு பகுதியை சேர்ந்த விக்னேஷ், 25, செல்லியம்பாளையத்தை சேர்ந்த ஏழுமலை, 33, ஆகிய இருவர் நகையை பறித்துச் சென்றது தெரிந்தது. இருவரையும் நேற்று போலீசார் கைது செய்து, தாலி கொடியை பறிமுதல் செய்தனர்.
28-Mar-2025