உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குண்டர் சட்டத்தில் இருவர் கைது

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

சேலம், சேலம், கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜ், 38. கடந்த ஜூன், 18ல், பள்ளி அருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். விசாரணையில், மொத்தமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி, சுற்றுவட்டார பகுதிகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 54, ரேஷன் அரிசி கடத்தலுக்காக, கடந்த 23ல், கைது செய்யப்பட்டார். ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் பல நிலுவையில் இருப்பதும், ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் இருவரையும், நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை