உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அனல் மின் நிலையத்தில் பயங்கரம் இருவர் பலி; 5 தொழிலாளர் காயம்

அனல் மின் நிலையத்தில் பயங்கரம் இருவர் பலி; 5 தொழிலாளர் காயம்

மேட்டூர்,:சேலம் மாவட்டம், மேட்டூரில், 4 அலகுகளில், 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.தற்போது, 2வது அலகில் பராமரிப்பு பணிகள் நடக்கும் நிலையில், இதர 3 அலகுகளில், 630 மெகாவாட் மின் உற்பத்தி நடந்தது. இதில், 3வது அலகில் நேற்று மாலை, 4:30 மணிக்கு திடீர் விபத்து ஏற்பட்டது. மின் உற்பத்திக்காக பாய்லருக்கு செல்லும் நிலக்கரி, தொட்டியில் மொத்தமாக சேமித்து வைக்கப்படும். அந்த தொட்டி உடைந்து நிலக்கரி துாள் மொத்தமாக கீழே கொட்டியது. அப்போது கீழே, 'அசோக்' ஒப்பந்த நிறுவனத்தின் கீழ், வெல்டிங் வேலை செய்த வெங்கடேசன், 45, பழனிசாமி, 25, ஆகியோர் நிலக்கரிக்குள் மூழ்கி இறந்தனர்.மேலும், ஐந்து பேர் படுகாயமடைந்தனர். நிலக்கரி கொட்டியதில் உடல் முழுவதும் கருப்பாக மாறிய, ஐந்து தொழிலாளர்களும் அனல்மின் நிலைய தீயணைப்பு வாகனம் மூலம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கருமலைக்கூடல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.விபத்து காரணமாக நேற்று மாலை, 4வது அலகும் பழுதடைந்ததால், 1வது அலகில் மட்டும், 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !