மேலும் செய்திகள்
எம்.சாண்ட் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
25-Sep-2025
உத்தனப்பள்ளி, உத்தனப்பள்ளி அருகே, மொபட் மீது பிக்கப் வாகனம் மோதிய விபத்தில், வாலிபர் உட்பட இருவர் பலியாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே பெரிய பேட்டகானப்பள்ளியை சேர்ந்த ராஜப்பா மகன் தனுஷ், 19. ஓசூர் அருகே குமுதேப்பள்ளியில் உள்ள அசோக் லேலண்ட் யூனிட்- 2, நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; நேற்று முன்தினம் மாலை, டி.வி.எஸ்., மொபட்டில், உத்தனப்பள்ளி - பாத்தக்கோட்டா சாலையில் சென்றார். அப்போது, சின்ன பேட்டகானப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி சின்ன புலியப்பா, 65, என்பவர், தனுஷிடம் லிப்ட் கேட்டு மொபட்டில் ஏறி கொண்டார்.டி.குருபரப்பள்ளி அருகே மொபட் சென்ற போது, சூளகிரியிலிருந்து உத்தனப்பள்ளிக்கு புதினா லோடு ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக சென்ற பிக்கப் வாகனம், மொபட் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், தனுஷ் மற்றும் சின்ன புலியப்பா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்திற்கு காரணமான பிக்கப் வாகன டிரைவர் தப்பியோடினார். உத்தனப்பள்ளி போலீசார், தலைமறைவாக இருந்த உத்தனப்பள்ளி அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த டிரைவர் சிவப்பா, 28, என்பவரை நேற்று கைது செய்தனர்.
25-Sep-2025