உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இரு தரப்பு மோதல்:முன்னாள் தலைவர் உள்பட8 பேர் மீது வழக்குப்பதிவு

இரு தரப்பு மோதல்:முன்னாள் தலைவர் உள்பட8 பேர் மீது வழக்குப்பதிவு

இரு தரப்பு மோதல்:முன்னாள் தலைவர் உள்பட8 பேர் மீது வழக்குப்பதிவுதாரமங்கலம், :தாரமங்கலம் அருகே தெசவிளக்கு, கருத்தானுாரை சேர்ந்தவர் குமரேசன், 37. இவர், மனைவி பெயரில் உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்துகிறார். இவர், 10 நாட்களுக்கு முன், கோமாளியூரில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த தெசவிளக்கு ஊராட்சி முன்னாள் தலைவர் கண்ணன், 45, 'பணம் செலவு செய்து சரவணனை தலைவர் ஆக்குவதாக தெரிவித்து வருகிறாயாமே' என கேட்டு மிரட்டியுள்ளார். தொடர்ந்து கடந்த, 16ல் குமரேசன் கடைக்கு சென்று கண்ணன் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து குமரேசன், தாரமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தார்.இந்நிலையில், இடைப்பாடி அரசு மருத்துவ மனையில் கண்ணன் அனுமதிக்கப்பட்டார். அவர் புகாரில், 'தெசவிளக்கில் சென்றபோது குமரேசன் உள்பட, 7 பேர் தாக்கினர்' என கூறியிருந்தார். குமரேசன் புகார்படி கண்ணன் மீதும், கண்ணன் புகார்படி குமரேசன் உள்பட ஏழு பேர் மீதும் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ