மது வாங்கிச்சென்ற 2 பேருக்கு காப்பு
ஆத்துார், ஆத்துார், கடைவீதியில் நேற்று, ஆத்துார் டவுன் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தபோது, 50 பீர் பாட்டில்கள் இருந்தன. விசாரணையில் கல்வராயன்மலை, குன்னுார், கிராங்காட்டை சேர்ந்த, சடையன் மகன் முத்து, 22, முருகேசன் மகன் ராஜ்குமார், 27, என தெரியவந்தது. அவர்கள் திருவிழாவுக்கு வாங்கிச்செல்வதாக கூறினர். இதனால் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.