உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விவசாய தோட்டத்தில் மது விற்பனை வீடியோவால் 2 பேருக்கு வலை

விவசாய தோட்டத்தில் மது விற்பனை வீடியோவால் 2 பேருக்கு வலை

தலைவாசல்: தலைவாசல், தேவியாக்குறிச்சியில் உள்ள விவசாய தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்கும் வீடியோ நேற்று முன்தினம் பரவியது. இதுகுறித்து தலைவாசல் போலீசார் விசாரித்ததில், விவசாயி பொன்னுசாமி, 52, தோட்டத்தில் மதுபாட்டில் விற்றதும், அதன் விற்பனையில் ரஞ்சித்குமார், 32, ஈடுபட்டதும் தெரிந்தது. இதனால் இருவர் மீதும் நேற்று வழக்குப்பதிந்த போலீசார், அவர்களை தேடுகின்றனர்.2 மூதாட்டி கைதுகெங்கவல்லி போலீசார், நேற்று அதே பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டிருந்த, கடம்பூரை சேர்ந்த சின்னப்பிள்ளை, 65, ஆணையாம்பட்டி வசந்தி, 55, ஆகியோரை, போலீசார் கைது செய்து, 20 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை