உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நில மோசடியில் 2 பேருக்கு காப்பு

நில மோசடியில் 2 பேருக்கு காப்பு

சேலம், சேலம், அயோத்தியாப்பட்டணம், டி.பெருமாபாளையத்தை சேர்ந்தவர் தனலட்சுமி, 65. இவர், இரு நாட்களுக்கு முன், சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், 'தந்தை பெருமாளுக்கு, வளையக்காரனுாரில், 7.81 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை, என் சகோதரர் ராஜசேகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்து இருந்தார்.அந்த மனு மீது, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, கனகலட்சுமி, அவரது மகன் சுந்தரமணிகண்டன், கோபிநாத், கிருஷ்ணமூர்த்தி, ஜெயராமன் உள்பட, 9 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில் கனகலட்சுமி, அவரது தம்பியான, சேலம், அல்லிக்குட்டையை சேர்ந்த கோபிநாத், 50, ஆகியோரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !