உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெட்ரோல் எடுத்துச்சென்றபோது தீ பைக்கில் சென்ற 2 பேர் காயம்

பெட்ரோல் எடுத்துச்சென்றபோது தீ பைக்கில் சென்ற 2 பேர் காயம்

மேட்டூர் : மேட்டூர் ஆர்.எஸ்., ராமமூர்த்தி நகர், கருங்கண்ணன் நகரை சேர்ந்தவர்கள் பூபதி, 37, அருள்குமார், 37. இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் பூபதி பைக்கில் பெட்ரோல் காலியாகி விட்டது. இதனால் காலை, 9:30 மணிக்கு, அருள்குமார் பைக்கில் இருவரும், மேட்டூர் ஆர்.எஸ்.,ல் உள்ள பங்க்குக்கு சென்றனர். பூபதி ஓட்டினார். பிளாஸ்டிக் பாட்டிலில், 50 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கிக்கொண்டு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.ராமமூர்த்தி நகர் மின் அலுவலகம் அருகே வந்தபோது, பீடி குடிக்க, அருள்குமார் தீக்குச்சி பற்ற வைத்தார். அப்போது பாட்டிலில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி எரிந்தது. இதில் பூபதி, அருள்குமாருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி