அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
சேலம்: வீரபாண்டி - சேலம் ரயில்வே ஸ்டேஷன்கள் இடைப்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில், நேற்று முன்தினம் காலை, 7:15 மணிக்கு, ஆண் சடலம் கிடந்தது. இதை அறிந்து, அங்கு சென்ற, சேலம் ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றியதில், 50 வயது மதிக்கத்தக்கவர் என தெரிந்தது. இளம் பச்சை நிறத்தில் கட்டம் போட்ட சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து தகவல் தெரிந்தால், சேலம் ரயில்வே போலீசாரை, 0427 - 2447404, 94981 01963 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.