ஊரக வேலை பணி கேட்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை
தலைவாசல், தலைவாசல், கவர்பனை மக்களில் பலர், தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிகின்றனர்.ஆனால் சிலருக்கு மட்டும் வேலை வழங்குவதால், அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று முன்தினம், தலைவாசல் ஒன்றிய அலுவலகத்தை, ஏராளமான பெண்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம், துணை பி.டி.ஓ., பரமேஸ்வரி பேச்சு நடத்தி, 'கவர்பனை ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு ஏற்ப, வேலை வழங்கப்பட்டுள்ளது.அரசு நிதி ஒதுக்கீடு செய்த பின், அனைவருக்கும் வேலை வழங்கப்படும்' என்றார். இதையடுத்து, பி.டி.ஓ., இளங்கோவிடம் மனு அளித்து விட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.