உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து உ.பி., டிரைவர் பலி

பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து உ.பி., டிரைவர் பலி

ஆத்துார், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிஜேந்திர்சிங், 63. டிரைவரான இவர், பதிவு எண் இல்லாத புது டிராக்டரை, சேலத்தில் இருந்து விழுப்புரம், மாயனுாருக்கு கொண்டு செல்வதற்காக ஓட்டிச்சென்றார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு ஆத்துார் புறவழிச்சாலையில், அப்பமசமுத்திரம் மேம்பால பகுதியொட்டி சென்றபோது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற கார், டிராக்டர் பின்புறம் மோதியது. இதில் சாலையோர, 20 அடி பள்ளத்தில், டிராக்டர் கவிழ்ந்து, பிஜேந்திர்சிங் உயிரிழந்தார். காரில் வந்த, 2 பேர் காயம் அடைந்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை