உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீர் மாசு அடைவதை தடுக்க வலியுறுத்தல்

குடிநீர் மாசு அடைவதை தடுக்க வலியுறுத்தல்

பனமரத்துப்பட்டி, மல்லுார் டவுன் பஞ்சாயத்து, 15வது வார்டு பி.மேட்டூர் மக்கள், நேற்று முன்தினம், டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அளித்த மனு:கிணறு, ஆழ்துளை குழாய் கிணறு அருகே இறைச்சி கடை வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைக்காரர், அருகே பெரிய பள்ளம் தோண்டி, இறைச்சி கழிவை விட, வேலை செய்து வருகிறார். இதனால் நிலத்தடி நீர் அசுத்தமாகி, கிணறு, ஆழ்துளை குழாய் கிணற்றின் தண்ணீர் மாசடையும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை