உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வைகாசி விசாக திருவிழா இன்று தேரோட்டம்

வைகாசி விசாக திருவிழா இன்று தேரோட்டம்

சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக திருவிழா கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினமும் காலை, மாலையில், பல்வேறு வித வாகனங்களில், சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது.இன்று காலை, 6:00 மணிக்கு மேல், ஸ்வர்ணாம்பிகை சமேத சுகவனேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, ராஜகணபதி கோவில் முன் நிறுத்தப்பட்டுள்ள தேரில் எழுந்தருளச்செய்கின்-றனர். 9:00 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. முக்கிய வீதிகள் வழியே சென்று, மீண்டும் ராஜகணபதி கோவில் முன் தேரை இழுத்து வருகின்றனர்.அதேபோல் கோட்டை அழகிரிநாதர் கோவில் வைகாசி பிர-மோற்சவ விழாவை ஒட்டி, தேரோட்டம் நாளை நடக்க உள்ளது. இதற்கு ராஜகணபதி கோவில் அருகே உள்ள, இரு கோவில்களின் தேர்களும் சுத்தப்படுத்தப்பட்டு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்-ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை