தாரமங்கலம், பட்டா வழங்க, உதவியாளர், லஞ்சம் வாங்கிய நிலையில், அந்த வீடியோ பரவியதால், ராமிரெட்டிப்பட்டி வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.சேலம் மாவட்டம் தாரமங்கலம், ராமிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது பூர்வீக நிலத்தின் ஒரு பகுதியை, தந்தை வையாபுரி பெயரில் கடந்த ஜனவரியில் கிரையம் செய்தார். தொடர்ந்து அந்த நிலத்துக்கு பட்டா கேட்டு, ராமிரெட்டிப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தார். அதற்கு, 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.சில நாட்களுக்கு முன், அலுவலகம் சென்ற முருகன், அங்கிருந்த உதவியாளர் சிவாவிடம், 10,000 ரூபாய் தருவதாக கூறி, முதலில், 4,000 ரூபாயை வழங்கினார். அந்த காட்சியை, முருகன், அவரது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்திருந்தார். அந்த காட்சிகள் பரவியதால், வி.ஏ.ஓ., தங்கமணியை, 'சஸ்பெண்ட்' செய்து, நேற்று, மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார் உத்தரவிட்டார்.