உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிட்டா மாற்றத்துக்கு ரூ.4,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

சிட்டா மாற்றத்துக்கு ரூ.4,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளி பஞ்., பெரிய பூதகோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன், 38. ஓசூரில் பைப் கடை வைத்துள்ளார். கடந்த, 2023, ஜூனில், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மணி என்பவரிடம், 80 சென்ட் நிலத்தை வாங்கினார். பட்டா ராஜேந்திரன் பெயருக்கு மாறினாலும், சிட்டா மணி பெயரிலேயே இருந்தது. இது குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், சிட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொடுக்க ராஜேந்திரன், தன் உறவினர் வெங்கடேசனிடம் கூறியுள்ளார். அவர், சந்தனப்பள்ளி வி.ஏ.ஓ., மாதேஸ்வரன், 53, என்பவரிடம் கேட்ட‍போது, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய, 4,000 ரூபாயை, வெங்கடேசன் மூலம் கொடுத்து அனுப்பினார். அப்பணத்தை அவரிடமிருந்து வி.ஏ.ஓ., மாதேஸ்வரன் பெற்ற போது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை