பாரதியாரின் நினைவு நாள் பல்வேறு அமைப்புகள் அஞ்சலி
சேலம், மகாகவி பாரதியார் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு பா.ஜ., மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.மகாகவி பாரதியாரின், 103வது நினைவு நாளையொட்டி, சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள அவரது சிலைக்கு, பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநில அமைப்பாளர் கோபிநாத், நெசவாளர் பிரிவு மாநில அமைப்பாளர் அண்ணாதுரை ஆகியோர், பாரதியாரின் கனவுகளை மெய்பிப்போம் என ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றார். மாவட்ட பொதுச்செயலர் பிரபாகரன், துணைத் தலைவர் சுமதிஸ்ரீ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதே போல் பாரதியாரின் நினைவு நாளையொட்டி, பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.