வி.சி., மாநாடு: 8 வாகனங்களில் செல்ல முடிவு
மேட்டூர்: வி.சி., சேலம் மேற்கு மாவட்ட சார்பில் கலந்தாய்வு கூட்டம் மேட்டூரில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலர் மெய்ய-ழகன் தலைமை வகித்தார். அதில் அக்., 2ல் கள்ளக்குறிச்சியில் நடக்க உள்ள மாநாட்டில், சேலம் மேற்கு மாவட்டத்தில் இருந்து, 8 வாகனங்களில் மகளிர் அணியினர் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மகளிரணி மாநில துணை செயலர் தில்லைக்கரசி, இடைப்பாடி தொகுதி செயலர் சிவ-குமார், மேட்டூர் தொகுதி துணை செயலர் தமிழ்செல்வன், மேற்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.