உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பா.ம.க., எம்.எல்.ஏ., மீது வி.சி.க., பகீர் குற்றச்சாட்டு

பா.ம.க., எம்.எல்.ஏ., மீது வி.சி.க., பகீர் குற்றச்சாட்டு

சேலம்: வி.சி.க.,வின், சேலம் வடக்கு மாநகர் மாவட்ட செயலர் காஜாமைதீன் தலைமையில், அக்கட்சியினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதன்பின், காஜாமைதீன் கூறியதாவது: சேலம், 15வது வார்டில் அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி தலைமையில், வார்டு சபா கூட்டம் கடந்த, 15ல் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தன்னை அழைக்கவில்லையென கூறி, பா.ம.க.,வை சேர்ந்த மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்ததோடு, பட்டியல் இனத்தை சேர்ந்த அலுவலரை, ஒருமையில் அவதுாறாக பேசி அவமதிப்பு செய்துள்ளார்.அவர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து அவர், அதிகாரிகளை மிரட்டுவது வாடிக்கையாகிவிட்டதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை