28 பிரதான சாலையில் வாகன கணக்கெடுப்பு
சேலம், சேலம் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் பிரதான சாலைகளில், எத்தனை வாகனங்கள் செல்கின்றன என்பது குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது.இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:நெரிசல் உள்ள சாலைகளில் இரு, நான்கு சக்கர வாகனங்கள் செல்வது குறித்து, 3 ஆண்டுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு செய்யப்படும். அதன்படி, 5 ரோடு, கலெக்டர் அலுவலகம் அருகே என, மாநகர், மாவட்டத்தில், 28 பிரதான சாலைகளில் வாகன கணக்கெடுப்பு நடக்கிறது. இப்பணியில் சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இம்மாத இறுதி வரை கணக்கெடுப்பு நடக்கும். ஒவ்வொரு சாலையிலும் ஒரு வாரம் பணி நடக்கிறது. இதையடுத்து சாலை விரிவாக்கம், சாலையை தடிமனாக அமைப்பது உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்படும். மேலும் கணக்கெடுப்பு விபரங்கள் சென்னைக்கு அனுப்பப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.