உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அதிக பாரம் ஏற்றியதால் விபத்தில் சிக்கிய வாகனம்

அதிக பாரம் ஏற்றியதால் விபத்தில் சிக்கிய வாகனம்

ஏற்காடு: ஏற்காட்டில் கடந்த மே மாதம் நடந்த கோடை விழாவில், அதே பகுதியில் சாக்லெட் கடை நடத்தும் குமார், படகு இல்ல ஏரி அருகே தற்காலிக கூடாரம் அமைத்து விற்பனையில் ஈடுபட்டார். நேற்று, தற்காலிக கடையின் தகரம், மரக்கம்பங்களை பிரித்தார். பின் சரக்கு வாகனத்தில் ஏற்றி, சேலம் நோக்கி அனுப்பினார். பெரிய வீராணத்தை சேர்ந்த ராஜேஷ், 37, ஓட்டினார். அதே பகுதியை சேர்ந்த கண்ணன், 37, அண்ணாமலை, 60, சந்-திரன், 54, வெற்றிவேல், 48, உடன் சென்றனர். மலைப்பாதை, 40 அடி பாலத்தை கடந்து சென்றபோது, வாகனத்தில் இருந்த அதிக பாரத்தால், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.இதில் ராஜேஷ் படுகாயம், மற்றவர்கள் காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை