உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எஸ்.ஐ.,யை அடிக்க பாய்ந்த கைதி வலைதளத்தில் வீடியோ வைரல்

எஸ்.ஐ.,யை அடிக்க பாய்ந்த கைதி வலைதளத்தில் வீடியோ வைரல்

எஸ்.ஐ.,யை அடிக்க பாய்ந்த கைதிவலைதளத்தில் வீடியோ 'வைரல்'சேலம், நவ. 10-மல்லுார் போலீசார், 2020ல் நடந்த கொலை வழக்கில் நரேஷ்குமார், 32, என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடக்கிறது. கடந்த, ௭ல் விசாரணைக்கு, மாவட்ட ஆயுதப்படை எஸ்.ஐ., ராமானுஜம் உள்ளிட்ட போலீசார், நரேஷ் குமாரை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு நரேஷ்குமார், போலீசாரிடம் பீடி, சிகரெட், சாப்பாடு கேட்டார்.அதற்கு, 'பீடி, சிகரெட் தர முடியாது. சாப்பாடு சிறையில் உள்ளது' என போலீசார் தெரிவித்தனர். இதில் ஆத்திரமடைந்த நரேஷ்குமார், எஸ்.ஐ.,யை அடிக்க பாய்ந்தார். அங்கிருந்த போலீசார், அவரை தடுத்தனர்.இதுகுறித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். ஆனால் நீதிமன்ற வளாகத்தில் எஸ்.ஐ.,யை, கைதி தாக்க பாய்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ