மேலும் செய்திகள்
பள்ளி மாணவியருக்கு 'ஸ்வெட்டர்' வழங்கல்
25-Dec-2024
கிராம அறிவியல் திருவிழா நிறைவுபனமரத்துப்பட்டி, டிச. 29-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் கிராம அறிவியல் திருவிழா, கடந்த, 26ல் தொடங்கி நேற்று நிறைவடைந்தது. பனமரத்துப்பட்டி வட்டார வள மைய மேற்பார்வையாளர் அசோக்ராஜா தலைமை வகித்தார். பனமரத்துப்பட்டி காந்தி நகர், பள்ளிதெருப்பட்டி, குரால்நத்தம் பகுதிகளில் முகாம் நடந்தது.அதில், மாணவ, மாணவியரின் செயல்பாடுகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்; மொபைல் போன் பயன்பாட்டை குறைத்து புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும்; இணையதளத்தில் பயன் உள்ள பக்கம், தவிர்க்க வேண்டிய பக்கம் குறித்து பெற்றோர், மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இயக்க பனமரத்துப்பட்டி கிளை தலைவர் தெய்வநாயகம், செயலர் புவனா, பொருளாளர் ஜீவிதா, ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி, ஆசிரியர் பயிற்றுனர் ஆனந்தி பங்கேற்றனர்.
25-Dec-2024