உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விநாயகா மிஷன்ஸ் அன்னபூரணா நர்சிங் கல்லுாரி பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன்ஸ் அன்னபூரணா நர்சிங் கல்லுாரி பட்டமளிப்பு விழா

சேலம் :சேலம் விநாயகா மிஷன்ஸ் அன்னபூரணா நர்சிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலை கல்லுாரியான, எஸ்.ஆர்.எம்., நர்சிங் கல்லுாரி முன்னாள் முதல்வர் கன்னியம்மாள் தலைமை வகித்து, மாணவியருக்கு பட்டம், பதக்கங்களை வழங்கினார். இதில் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை இயக்குனர் ராமசாமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விநாயகா மிஷன்ஸ் அன்னபூரணா நர்சிங் கல்லுாரி முதல்வர் மகேஸ்வரி, உறுதி மொழி ஏற்று நடத்தினார். கல்லுாரியின் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பட்டதாரிகளின் பெற்றோர், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !