உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விநாயகா மிஷன்ஸ் பார்மசி கல்லுாரி ஆண்டு விழா கொண்டாட்டம்

விநாயகா மிஷன்ஸ் பார்மசி கல்லுாரி ஆண்டு விழா கொண்டாட்டம்

சேலம், சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலையின் உறுப்பு கல்லுாரியான விநாயகா மிஷன்ஸ் பார்மசி கல்லுாரியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பல்கலை பதிவாளர் நாகப்பன் முன்னிலை வகித்தார். முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு, மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி, பரிசுகள் வழங்கி பேசினார். விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பல்கலை இயக்குனர் ராமசாமி, முதுநிலை மேலாளர் பாலசுப்ரமணியம், பரிசுகள் வழங்கினர். விநாயகா மிஷன்ஸ் பார்மசி கல்லுாரி முதல்வர் குமார், ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் கோதை, டாக்டர்கள் அருள், மார்க்ரெட் சந்திரா, குமுதவள்ளி, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இறுதியில் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை