உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வினாடி - வினாவில் விருதுநகர் முதலிடம்

வினாடி - வினாவில் விருதுநகர் முதலிடம்

சேலம், தேசிய அளவில் மருத்துவ கல்லுாரிகள் இடையே வினாடி - வினா போட்டி, ஆன்லைனில் நடத்தி, அதில் வெற்றி பெற்றோருக்கு, 'ஆப்லைன்' போட்டி, சேலம் இரும்பாலை அரசு மருத்துவ கல்லுாரியில் நேற்று நடந்தது. மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.சேலம், சென்னை ஸ்டான்லி, ஓமந்துாரார் மருத்துவ கல்லுாரி, எம்.எம்.சி., சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, மதுரை அரசு மருத்துவ கல்லுாரி, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் படிக்கும், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியாக விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமாரி, பேராசிரியர்கள் ராஜேஷ் செங்கோடன், சுரேஷ்கண்ணா, விஜயராஜ், அருள்குமரன், இளஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ