உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வ.உ.சி., பிறந்த நாள் கட்சியினர் மரியாதை

வ.உ.சி., பிறந்த நாள் கட்சியினர் மரியாதை

சேலம் :சுதந்திர போராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின், 154வது பிறந்தநாள் விழா, சேலம், பிரபாத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. அதில் சிதம்பரனார் சிலைக்கு, பா.ஜ., சார்பில் நெசவாளர் பிரிவு மாநில அமைப்பாளர் அண்ணாதுரை, சுற்றுச்சூழல் பிரிவு மாநில அமைப்பாளர் கோபிநாத், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதேபோல் மாநகர் காங்., தலைவர் பாஸ்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் துணைத்தலைவர்கள் கோபிகுமரன், ஈஸ்வரி வரதராஜூ, மண்டல தலைவர் சாந்தமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை