| ADDED : ஆக 21, 2024 06:28 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளிலும், 2025க்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளும் பணி நேற்று தொடங்கப்பட்டது. 2025 ஜன., 1ஐ தகுதி ஏற்பு நாளாக கருதி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடக்கிறது. அதன்படி ஓட்-டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுதோறும் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஓட்டுச்சாவடிகளை மாற்றி அமைத்தல், வாக்காளர் புகைப்பட அட்டையில் உள்ள முரண்பாடுகளை களைதல் போன்ற பணிகள், அக்., 18 வரை மேற்கொள்ளப்படுகிறது. பின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்., 29ல் வெளியி-டப்படும். இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகள், நவ., 28 வரை மேற்கொள்-ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல், 2025 ஜன., 6ல் வெளியி-டப்படும். அதனால் வீடு தோறும் வந்து வாக்காளர் சரிபார்ப்பு பட்டியலில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்-கொண்டுள்ளார்.