தனியார் வேலை வேண்டுமா? வரும் 16ல் நேரில் வாங்க
சேலம் :சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் கோரிமேட்டில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்,தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் 16ல் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு தொடங்கி மதியம், 1:00 மணி வரை நடக்கும் முகாமில், 8 முதல் 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி கொண்டவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.ஆளெடுக்கும் நிறுவனங்கள், வேலை தேடுவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முகாம் தொடர்பான விபரங்களை, gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிந்து கொள்ளலாம். தவிர, 0427 - 2401750 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பேசலாம். வேலை தேடும் மாணவ, மாணவியர் முகாமை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.