இடைப்பாடியில் வார்டு சபை கூட்டம்
இடைப்பாடி, இடைப்பாடி நகராட்சியில் வார்டு சபை கூட்டம், நைனாம்பட்டியில் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் பாஷா தலைமை வகித்தார். சேலம் எம்.பி., செல்வகணபதி பேசுகையில்,'' தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, மக்களுக்கு தேவையான திட்டங்களை, அவர்களின் மனம் அறிந்து செயல்படுத்தி வருகிறார்.நகைக்கடன் தள்ளுபடி, காலை உணவு திட்டம், விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை என மக்களுக்கு தேவையான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்,'' என்றார். நகராட்சி ஆணையாளர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.