தனியார் பஸ் டிரைவருக்கு எச்சரிக்கை
வாழப்பாடி:வாழப்பாடி மோட் டார் வாகன இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், நேற்று முன்தினம் மதியம் ஆய்வில் ஈடுபட்டார்.அப்போது, துறையூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ், வாழப்பாடி ஊருக்குள் செல்லாமல், புதுப்பாளையம் புறவழிச்சாலையில் பயணியரை இறக்கிவிட்டு சென்றது.உடனே அந்த பஸ்சை மடக்கி, டிரைவர், கண்டக்டரை, இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் எச்சரித்தார்.பின் அந்த தனியார் பஸ் மீது வழக்குப்பதிந்து, அபராதம் விதிக்க சேலம் கலெக்டர் இளம் பகவத்துக்கு பரிந்துரைத்தார்.