மேலும் செய்திகள்
உடல்நிலை பாதிப்பால் தாய், மகன் தற்கொலை
12-Jul-2025
மேட்டூர்:வீட்டில் மூதாட்டி மர்மமான நிலையில் எரிந்து கிடந்த நிலையில், அவரது மகனை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சேலம் மாவட்டம், காரைக்காடு கிராமம், தமிழகம் - கர்நாடகா எல்லையில் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்தவர் சின்னபொண்ணு, 75. அவரது மகள் மாதம்மாள் என்பவருக்கு திருமணமாகி, ஊஞ்சக்கொரையில் வசிக்கிறார். மகன் மணி, 45, என்பவர், பொக்லைன் ஆப்பரேட்டர். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கருத்து வேறுபாடால் மணியை விட்டு பிரிந்த அமுதா, அருகே உள்ள கருங்கல்லுாரில், பெற்றோர், குழந்தைகளுடன் வசிக்கிறார். மணியும், சின்னபொண்ணுவும், காரைக்காட்டில் வசித்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, மூதாட்டி சின்னபொண்ணு முகம் தவிர்த்து உடலின் மற்ற பகுதிகள் அனைத்தும் எரிந்து கருகிய நிலையில், கட்டிலில் இறந்து கிடந்தார். அருகே காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் கேன் இருந்தன. கொளத்துார் போலீசார் வழக்குப்பதிந்து, மூதாட்டியின் மகன் மணியை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
12-Jul-2025