உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கதவணை மின்நிலைய நீரில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு

கதவணை மின்நிலைய நீரில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு

மேட்டூர்: மேட்டூரில் இருந்து, 10 கி.மீ.,ல் உள்ள செக்கானுாரில், காவிரி குறுக்கே கதவணை மின் உற்பத்தி நிலையம் உள்ளது. அங்கு, 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய, மேட்டூர் அணை அடிவாரம் முதல் கதவணை வரை, 0.45 டி.எம்.சி., நீர் தேக்கி வைக்கப்பட்-டுள்ளது. தற்போது அணையில் இருந்து பாசனத்துக்கு, 1,000 கன-அடி நீர் மட்டும் வெளியேற்றுவதால், செக்கானுார் கதவணையில் தினமும், 2.5 மெகாவாட் மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்யப்ப-டுகிறது.இந்நிலையில் மேட்டூர் அணை அடிவாரம் முதல் செக்கானுார் வரை காவிரியில் தேங்கி நின்ற ஆகாயத்தாமரைகள், காற்றின் வேகத்தால் அங்கிருந்து நகர்ந்து கதவணையின் ஒரு பகுதியில் மொத்தமாக தேங்கி நிற்கின்றன. அப்பகுதியில் மின் உற்பத்தி நிலையம் இல்லாததால் பாதிப்பு இல்லை. இருப்பினும் காற்று தெற்கு நோக்கி வீசினால், ஆகாயத்தாமரைகள், மின் உற்பத்தி செய்யும் பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. அப்போது மின் உற்-பத்தி பாதிக்கவும் வாய்ப்புள்ளதால், ஆகாயத்தாமரைகளை அகற்ற, மின்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை