உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பழைய பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு

பழைய பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு

பெத்தநாயக்கன்பாளையம்:பெத்தநாயக்கன்பாளையம் அருகே பாப்பநாயக்கன்பட்டியில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கன அடி நீர் தேங்கும்படி, 188.76 ஏக்கரில், கரியகோவில் அணை உள்ளது. நேற்று, 50.65 அடி உயரத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. இந்நிலையில் பழைய பாசன பகுதிகளுக்கு, இன்று காலை, 8:00 மணி முதல், தலைமை மதகு மூலம் வினாடிக்கு, 108 கன அடி என, 10 நாட்களுக்கு, 91.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல், சிறப்பு நனைப்பாக திறந்து விட நேற்று அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதேபோல் புது பாசன பகுதிகளுக்கு, வரும் மே, 10 முதல், அணையின் வலது, இடது புற கால்வாய்கள் மூலம், வினாடிக்கு தலா, 15 கன அடி வீதம், 24 நாட்களுக்கு, 61.25 மில்லியன் கன அடிக்கு மிகாமல் திறக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ