மேலும் செய்திகள்
விளை நிலமாக்க மானியம் வேளாண் இணை இயக்குனர் தகவல்
04-Jul-2025
கெங்கவல்லி, கெங்கவல்லி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மோகனசரிதா அறிக்கை:வேளாண் துறையில் அனைத்து கிராம வேளாண் வளர்சி திட்டத்தில், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விண்ணப்பிக்கலாம். கெங்கவல்லி வட்டாரத்தில், 14 ஊராட்சிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைவதே இதன் நோக்கம். தனி நபர் நிலங்களில் புதர் நீக்கி சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு, 9,500 ரூபாய் வழங்கப்படுகிறது. சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் வரப்பு பயிராக பயறுவகை பயிர்களை பயிரிட பயறு விதைகள், 200 ரூபாய் மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும் மண் வளப்படுத்த உயிர் உரங்கள், லிட்டர், 450 ரூபாய் மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற, கெங்கவல்லி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அல்லது தம்மம்பட்டி துணை வேளாண் விரிவாக்க மையம், தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்.
04-Jul-2025